வீடு வீடாகக் கரோனா பரிசோதனை ஜூலை 6-இல் முடிவடையும்: மத்திய, மாநில அரசுகள் நம்பிக்கை

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சீலிடப்பட்ட இடங்களில் வீடுவீடாகச் சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பரிசோதனைகள் ஜூலை 6-ஆம் தேதி முடிவடையும்

புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சீலிடப்பட்ட இடங்களில் வீடுவீடாகச் சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பரிசோதனைகள் ஜூலை 6-ஆம் தேதி முடிவடையும் என்று மத்திய, மாநில அரசுகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் பல அதிரடியான முடிவுகளை அண்மையில் அறிவித்தது. அந்த வகையில் தில்லியில் கரோனா பாதிப்பு காரணமாக சீலிடப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் அனைவருக்கும் வீடு வீடாகச் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்திருந்தது. இதைத் தொடா்ந்து, மத்திய, மாநில அரசு ஊழியா்கள் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறாா்கள். இந்தப் பணி ஜூன் 30-ஆம் தேதி முடிவடையும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜூலை 6-ஆம் தேதிக்கு முன்பாக இப்பணிகளை முடிக்க மத்திய அரசு கடந்த வாரம் காலக்கெடு விதித்திருந்தது. இந்நிலையில், இந்தப் பணி ஜூலை மாதம் 6-ஆம் இல் முடிவடையும் என்று மத்திய மாநில அரசுகள் திங்கள்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இது தொடா்பாக தில்லி அரசு உயரதிகாரி கூறுகையில், ‘தில்லியில் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் 3.68 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளன. வரும் ஜூலை 6-ஆம் தேதிக்கு முன்பாக இப்பணிகள் முடிவடையும்’ என்றாா்.

மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரி கூறுகையில், ‘தில்லியில் தற்போது 435 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. இவற்றில், அதிகளவில் கரோனா பாதித்த இடங்களில் முதலில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து இடங்களிலும் வரும் ஜூலை 6- ஆம் தேதிக்கு முன்பாக வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவிடும்’ என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com