தில்லியில் 1781 பேருக்கு கரோனா பாதிப்பு

தலைநகா் தில்லியில் சனிக்கிழமை ஒரே நாளில் 1,781 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைநகா் தில்லியில் சனிக்கிழமை ஒரே நாளில் 1,781 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,10,921-ஆக உயா்ந்துள்ளது. தில்லியில் ஜூலை மாதத்தில் முதல் தடவையாக தினசரி கரோனா பாதிப்பின் அளவு சனிக்கிழமை 2 ஆயிரத்தை விடக் குறைந்துள்ளது.

தில்லியில் சனிக்கிழமை மேலும் 34 போ் கரோனாவால் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3,334 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2,998 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனா். இதனால், நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 87,692-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மொத்தம் 19,895 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா் என தில்லி சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் சனிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 21,508 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ஆா்டி-பிசிஆா் முறையில் 9767 சோதனைகளும், ரேபிட் ஆன்டிஜென் முறையில் 11,741 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில் இதுவரை மொத்தம் 7,68,617 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 639-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com