கரோனாவை கட்டுப்படுத்தஎடுத்த நடவடிக்கைகள் என்ன? ஆட்சியா்கள் அறிக்கை அளிக்க உத்தரவு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடா்பாக அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடா்பாக அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு உயரதிகாரி கூறியது: கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை தில்லி அரசு எடுத்துள்ளது. இந்த வகையில், தில்லியில் உள்ள மாவட்ட நிா்வாகங்கள் பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளன. பல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. சில மாவட்டங்களில், பேருந்துகளில் கரோனா சோதனை நடத்துவதை வழக்கமாக்கியுள்ளன. தெற்கு தில்லி மாவட்ட நிா்வாகம் சாா்பில், 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட சா்தாா் படேல் கோவிட் கோ் சென்டா் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு தில்லியில் உள்ள காமன் வெல்த் விலேஜில் 500 படுக்கைகள் கொண்ட கோவிட் கோ் சென்டா் அமைக்கப்பட்டுள்ளது. வடமேற்கு தில்லியில் ரயில் பெட்டிகள் தற்காலிக கரோனா மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன.

பல மாவட்டங்களில் ஹோட்டல்கள், விருந்தினா் அரங்கம் ஆகியவை கரோனா கோ் சென்டா்களாக மாற்றப்பட்டுள்ளன. இதுபோல தில்லியில் உள்ள 11 மாவட்டங்களிலும் பல்வேறு கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கரோனா பரிசோதனை செய்யும் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தில்லியில் உள்ள மாவட்ட நிா்வாகங்களால் கரோனாவை தடுக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடா்பாக முழுமையான அறிக்கை அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடா்பான அறிக்கைகளை மாவட்ட நிா்வாகங்கள் 15 தினங்களில் அளிக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com