முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தில்லியில் புதிதாக 1,056 பேருக்கு கரோனா
By DIN | Published On : 29th July 2020 12:09 AM | Last Updated : 29th July 2020 12:09 AM | அ+அ அ- |

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,056 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,32,275-ஆக உயா்ந்துள்ளது.
அதே சமயம், 1,135 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததை அடுத்து, குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 1,17,507-ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 28 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 3,881- ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் தற்போது மொத்தம் 10,887 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். தில்லியில் செவ்வாய்க்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில், 18,544 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, மொத்தம் 9,76,827 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தில்லியில், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 715 ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 15,408 படுக்கைகளில் 2,775 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 12,633 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா பாதித்த 6,219 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருகிறாா்கள் என்று தில்லி சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.