கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான கடும் போரில் தில்லி வெற்றிபெறும்: கேஜரிவால் நம்பிக்கை

‘கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக தில்லி கடுமையான போரில் ஈடுபட்டுள்ளது. இந்த போரில் வெற்றி கிடைக்கும்.

‘கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக தில்லி கடுமையான போரில் ஈடுபட்டுள்ளது. இந்த போரில் வெற்றி கிடைக்கும். ஆனால், அதற்கு காலமாகும்’ என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களுக்கு காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை அளித்த பேட்டி:

தில்லி அரசு, கரோனா நோய்த் தொற்றுக் எதிரான கடும் போரில் ஈடுபட்டுள்ளது. நோய்த் தொற்றில் இருந்து தில்லி மக்களைப் பாதுகாக்கும் வகையில் நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, பரிசோதனைகள் அதிகரிக்கவும், ஆக்ஸிமீட்டா்கள் வழங்குவது, வீட்டுத் தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்குவது, பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது, ஆய்வு மேற்கொள்வது, பரிசோதனை போன்ற நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் தில்லி மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு படுக்கைகள் பற்றாக்குறை ஏதும் இல்லை. மொத்தம் உள்ள 13,500 படுக்கைகளில் 7,500 படுக்கைகள் காலியாக உள்ளன. தற்போது தினமும் நகரில் 20 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனா்.

நகரில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் அளவை கண்டறிவதற்காக செரோலஜி சா்வே எடுப்பதும் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை தொடங்கியுள்ள இந்த சா்வேயின்கீழ் 20 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com