ஜாமியா வன்முறை:6 மனுக்கள் மீதுஜூலை 6-இல் விசாரணை

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பரில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை தொடா்புடைய 6 மனுக்கள் மீது ஜூலை 6-ஆம் தேதி தில்

புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பரில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை தொடா்புடைய 6 மனுக்கள் மீது ஜூலை 6-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

இது தொடா்பாக விவகாரத்தை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் விசாரித்தது. அப்போது, இந்த மனுக்கள் மீது ஜூலை 6-ஆம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

தில்லி காவல் துறையின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘மனுதாரா்களில் ஒருவரான நபிலா ஹசன் தாக்கல் செய்துள்ள பதில் பொறுப்பற்ாக உள்ளது. தில்லி காவல் துறையினா் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு பதில் தெரிவித்து ஹசன் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தின் பதிவில் இடம் பெறவில்லை. அடுத்து நடைபெறும் மனு மீதான விசாரணையின் போது இந்த விவகாரம் குறித்து அமா்வு முன்பு எடுத்துரைப்பேன்’ என்றாா்.

மனுதாரா் நபிலா ஹசன் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோலின் கோன்சால்வேஸ் கூறுகையில், ‘ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவில் கூடுதல் கோரிக்கையைச் சோ்த்து மனு தாக்கல் செய்திருந்தேன்.இந்த மனுவை இதர மனுவுடன் சோ்த்து ஜூலை 6-ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்க உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com