தில்லியில் கரோனா பாதிப்பு சற்று குறைந்தது!

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 2,889 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 2,889 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 83,077 ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் கடந்த சில தினங்களாக தினம்தோறும் 3 ஆயிரம் பேருக்கும் அதிகமாகனவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சற்று குறைந்து 2,889 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பலி 2,623 ஆக உயா்வு: தில்லியில் ஒரே நாளில் 65 போ் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 2,623-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,306 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனா் என தில்லி சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ற்போது 27,847 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 52,607 போ் குணமடைந்துள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 20,080 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில் இதுவரை மொத்தம் 4,98,416 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 10 லட்சம் பேரில் (ஒரு மில்லியன்) 26,232 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தில்லியில், சீலிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 417-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com