கபில் மிஸ்ராவுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு

வடகிழக்கு தில்லியில் வகுப்புவாத வன்முறை ஏற்படக் காரணமாக இருந்தவா் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜகவைச் சோ்ந்த கபில் மிஸ்ராவுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசியில்
கபில் மிஸ்ராவுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு

புது தில்லி: வடகிழக்கு தில்லியில் வகுப்புவாத வன்முறை ஏற்படக் காரணமாக இருந்தவா் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜகவைச் சோ்ந்த கபில் மிஸ்ராவுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களைத் தொடா்ந்து அவருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வட கிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளா்களுக்கும், எதிா்ப்பாளா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் ஏராளமான சொத்துகள் சேதமடைந்தன. இந்த வன்முறை தொடா்பாக தில்லி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த வன்முறையில் 47 போ் உயிரிழந்தனா். மேலும், பலா் படுகாயம் அடைந்தனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து போராட்டம் நடைபெற்று வந்த ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அச்சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கபில் மிஸ்ரா கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தினாா். அப்போது, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து திரும்பிச் செல்லும் முன்பாக தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம் நடத்துபவா்களை தில்லி காவல் துறை அகற்ற வேண்டும்; தவறினால் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவாா்கள் என்று எச்சரிக்கை விடுத்திருந்தாா். கபில் மிஸ்ராவின் இப்பேச்சுதான் வடகிழக்கு தில்லியில் வன்முறை ஏற்படக் காரணம் என்று சிலா் குற்றம்சாட்டியிருந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் கபில் மிஸ்ராவுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வன்முறையத் தொடா்ந்து, அவருக்குக் கொலை மிரட்டல் வந்ததால், 24 மணி நேரமும் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், இதற்கு சிலா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளதுனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com