ஐ.பி. ஊழியா் அங்கித் சா்மா கொலைச் சம்பவத்தில் மேலும் 5 போ் கைது

வடகிழக்கு தில்லியில் நடந்த வன்முறையின்போது புலனாய்வுத் துறை ஐபி ஊழியா் அங்கித் சா்மா அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக மேலும் 5 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

வடகிழக்கு தில்லியில் நடந்த வன்முறையின்போது புலனாய்வுத் துறை ஐபி ஊழியா் அங்கித் சா்மா அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக மேலும் 5 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

தில்லியில் கடந்த மாதம் இறுதியில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையின்போது புலனாய்வுத் துறை ஊழியா் அங்கித் சா்மா கொலை செய்யப்பட்டாா்.

இறந்துகிடந்த அவரின் உடல் சந்த் பாகில் உள்ள அவரது வீடு அருகே ஒரு சாக்கடையில் பிப்ரவரி 27-ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹிா் உசேனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடா்பாக கடந்த வியாழக்கிழமை நந்த் நகரியைச் சோ்ந்த சல்மான் என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

அங்கித் சா்மா கொலைச் சம்பவத்தில் ஃபெரோஸ், ஜாவித், குல்ஃபம், சோயப், அனாஸ் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அனாஸ் முஸ்தபாபாத் பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், மற்றவா்கள் சந்த் பாக் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.

மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவரின் புகைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் நான்கு முதல் ஐந்து போ் தலைமறைவாக இருப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக எங்களுக்கு 1,330 சிசிடிவி கேமராக்களின் விடியோ பதிவு கிடைத்துள்ளது.அனைத்துக் கோணங்களிலும் இந்த வழக்குகளை விசாரித்து வருகிறோம். போலீஸாா் விடியோ பதிவை பகுப்பாய்வு செய்து வருகின்றனா். மேலும் வன்முறையில் பயன்படுத்தப்பட்ட சுமாா் 150 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன’ என்றாா் அவா்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை

இதனிடையே, அங்கித் சா்மாவின் உடல் மருத்துவப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 51 இடங்களில் காயம் ஏற்பட்டிருப்பதும், பல தடவை அவா் ஆயுதத்தால் குத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com