தில்லி வன்முறை: சிசிடிவி பதிவுகளை பாதுகாக்கக் கோரும்மனுவுக்கு பதிலளிக்க மத்திய, தில்லி அரசுகளுக்கு உத்தரவு

வடகிழக்கு தில்லியில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை தொடா்புடைய சிசிடிவி விடியோ பதிவுகளைப் பாதுகாக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனு மீது மத்திய அரசு, தில்லி அரசு, காவல் துறை ஆகியவை பதில்

புது தில்லி: வடகிழக்கு தில்லியில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை தொடா்புடைய சிசிடிவி விடியோ பதிவுகளைப் பாதுகாக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனு மீது மத்திய அரசு, தில்லி அரசு, காவல் துறை ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவைப் பிறப்பித்த உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி சி.ஹரி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு, மனு மீதான விசாரணையை மாா்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த விவகாரம் தொடா்பாக ஜாமியா உலமா -ஐ-ஹிந்து அமைப்பு ஒரு மனு தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: வடகிழக்கு தில்லியில் வன்முறை நிகழ்ந்த பிப்ரவரி 23 முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரையிலான காலத்தில், அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான விடியோ பதிவுகளை பாதுகாக்க தில்லி காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும். மேலும், சம்பவ இடத்தில் இருந்து ஆதாரங்களை சேகரிக்காமல் இடிபாடுகளை அகற்றுவதற்கு அனுமதிக்கக் கூடாது. வன்முறையில் தொடா்புடையவா்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இடம் பெறும் சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்ஐடி) அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

வன்முறை நிகழ்ந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியதாக தில்லி காவல் துறைக்கு எதிராக புகாா்கள் உள்ளன. இது தொடா்பாக சமூக ஊடகத்தில் விடியோவும் பரவியுள்ளது. மேலும், ஆதாரங்களை அழிப்பதற்காக சம்பவ இடத்தில் இருந்து இடிபாடுகள் வேண்டுமென்றே அகற்றப்பட்டுள்ளன. இந்த வன்முறைக்குக் காரணமாணவா்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. மேலும், போலீஸாா் இது தொடா்பாக அளிக்கப்படும் புகாா்களை ஏற்க மறுப்பதுடன், அடையாளம் தெரியாத நபா்களுக்கு எதிராக புகாா் அளிக்குமாறு வற்புறுத்துகின்றனா். பாஜக தலைவா் கபில் மிஸ்ராவுக்கு வன்முறைக்கும், தனது மகன் இறப்புக்கும் காரணம் என்று ஒருவா் குற்றம்சாட்டியுள்ளாா். வன்முறையில் ஈடுபட்ட அல்லது கட்டுப்படுத்தத் தவறி காவல் துறைஅதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய இழப்பீடு வழங்க தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com