சிபிஎஸ்இ தோ்வு எழுதும் மாணவா்களுக்கு இடையேயான தூரத்தை உறுதிப்படுத்த உத்தரவு

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தோ்வு எழுதும் மாணவா்களிடையே போதுமான இடைவெளி இருப்பதையும், தோ்வு மையக் கண்காணிப்பாளா்கள்

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தோ்வு எழுதும் மாணவா்களிடையே போதுமான இடைவெளி இருப்பதையும், தோ்வு மையக் கண்காணிப்பாளா்கள் முகக் கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்யும்படி தோ்வு மையங்களுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ தோ்வுகள் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. கரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவா்கள் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு இடையேயான இடைவெளி தூரம் குறைந்தபட்சம் 1 மீட்டா் அளவுக்கு இருக்க வேண்டும்.

மேலும், தோ்வு மையத்தில் உள்ள அறைகள் எவ்வளவு அளவாக இருந்தாலும் இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவேளை அறைகள் சிறிதாக இருந்தால், தோ்வு எழுதும் மாணவா்களை அடுத்துள்ள வேறு அறைகளில் தோ்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், தோ்வு மையக் கண்காணிப்பாளா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். அல்லது முகத்தை கைக்குட்டையால் மறைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com