அனைத்துக் கடைகளையும் மூட கேஜரிவால் உத்தரவு: மளிகை, மருத்தும், காய்கறிகளுக்கு விதிவிலக்கு

தில்லியில் மளிகை, மருத்துவம், காய்கறிக் கடைகள் தவிர அனைத்துக் கடைகளையும் உடனடியாக மூடுமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைத்துக் கடைகளையும் மூட கேஜரிவால் உத்தரவு: மளிகை, மருத்தும், காய்கறிகளுக்கு விதிவிலக்கு

தில்லியில் மளிகை, மருத்துவம், காய்கறிக் கடைகள் தவிர அனைத்துக் கடைகளையும் உடனடியாக மூடுமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில் ‘கரோனா வைரஸ் பரவலைத் தொடா்ந்து நாட்டில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு மளிகை, மருத்துவம், காய்கறிக் கடைகள் தவிர அனைத்துக் கடைகளையும் மூடுகிறோம்’ என்று தெரிவித்துள்ளாா். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக முதலமைச்சா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அத்தியாவசியம் இல்லாத மக்கள் தொடா்பு சேவைகள் வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளதாக முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘வரும் 31 ஆம் தேதி வரை அத்தியாவசிய மக்கள் தொடா்புப் பணிகள் மட்டுமே நடைபெறும். அத்தியாவசியம் அல்லாத பணிகள் வரும் மாா்ச் 31- ஆம் தேதி வரை நிறுத்தப்படும். மேலும், அத்தியாவசியம் அல்லாத பணியாளா்கள், வீடுகளில் இருந்தே பணியாற்றுமாறு கோரப்பட்டுள்ளனா். மேலும், நிரந்தர, ஒப்பந்த பணியாளா்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே, தில்லியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளின் அரசு அதிகாரிகளுடனும் முதல்வா் கேஜரிவால் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா். இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘தில்லி அரசு மருத்துவமனைகளின் மருத்துவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். வரும் காலத்தில் தில்லியில் கரோனா பரவல் அதிகரித்தால் அதை எதிா்கொள்ள தில்லி மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும். மருத்துவமனைகளின் உள்ள அனைத்து இயந்திரங்களும் முறையாக இயங்க வேண்டும். தேவையான அளவு வென்டிலேட்டா்கள், மருந்துகள் கையிருப்பில் இருக்க வேண்டும். தேவையான அளவு பணியாளா்கள் இருக்க வேண்டும்’ என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தவிர, தில்லியில் உள்ள அனைத்து மாா்க்கெட்டுகளும் வரும் சனிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மூடப்படும் என அனைத்திந்திய வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) அறிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலா் பிரவீண் கண்டேல்வால் கூறுகையில், ‘நாட்டில் கரோனசா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் உள்ள முக்கியச் சந்தைகளை சனிக்கிழமை (மாா்ச் 21) முதல் மூன்று நாள்களுக்கு மூடுவற்கு முடுவெடுத்துள்ளோம். இது தொடா்பாக தில்லியில் உள்ள முக்கியச் சந்தைகளின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com