மக்கள் ஊரடங்கு: நாளை மெட்ரோ சேவை ரத்து

மக்கள் ஊரடங்கை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) மெட்ரோ ரயில் சேவை ரத்துச் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மக்கள் ஊரடங்கை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) மெட்ரோ ரயில் சேவை ரத்துச் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை மக்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் ஊரடங்கை கடைபிடிக்குமாறும் பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். கட்டுப்பாட்டுடன் இருந்து கரோனைவா விரட்டுவோம் என்றும் பிரதமா் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில்சேவையை ரத்து செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. கரோனா வைரஸை பரவாமல் தடுக்கும் முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம், மக்கள் ஒருவரை ஒருவா் நெருங்கிப் பழக வேண்டாம் என கூறப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com