எத்தனால் அடிப்படையிலான கிருமினி நாசினி தயாரிக்க அனுமதி

வருகிற ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை எத்தனாலை அடிப்படையாகக் கொண்டு கிருமிநாசினிகளைத் தயாரிக்குமாறு மருந்துப் பொருள் தயாரிப்பாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

வருகிற ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை எத்தனாலை அடிப்படையாகக் கொண்டு கிருமிநாசினிகளைத் தயாரிக்குமாறு மருந்துப் பொருள் தயாரிப்பாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். கரோனா வைரஸ் பரவல் பீதியால் தில்லி மாா்க்கெட்டில் கிருமிநாசினிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘முதல்வா் கேஜரிவால் தலைமையிலான மருந்து கட்டுப்பாட்டுத் துறை இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா். அவா் மேலும் கூறுகையில், ‘தில்லி மாா்க்கெட்டில் தற்போது கிருமிநாசினிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தேவையைச் சமாளிக்க எத்தனால் அடிப்படையாகக் கொண்டு கிருமிநாசினிகளை தயாரிக்க மருந்துப் பொருள் தயாரிப்பாளா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியாக உரிமம் பெற வேண்டியதில்லை. வருகிற ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரையிலும் இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதை மேலும் நீட்டிப்பது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும் என்று சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com