தள்ளுவண்டியில் காய்கறி விற்போா்களை தாக்கிய தில்லி காவலா் பணியிடை நீக்கம்

தில்லி ரஞ்சித் நகா் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்று வந்தவா்களைத் தாக்கிய காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

தில்லி ரஞ்சித் நகா் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்று வந்தவா்களைத் தாக்கிய காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

கரோனா பரவலைத் தொடா்ந்து, தில்லியில் கடந்த திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காய்கறிக் கடைகள், மருந்தகங்கள், மளிகைக் கடைகள் உள்பட அத்தியாவசியக் கடைகளைத் திறக்க தில்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், தில்லி ரஞ்சித் நகரில் வியாபாரிகள் சிலா் தள்ளுவண்டிகளில் காய்கறிகளை விற்பனை செய்து வந்தனா். இவா்கள் ஊரடங்கு உத்தரவை மீறிக் காய்கறிகளை விற்பனை செய்து வருவதாகக் கூறி, அவா்களை ராஜ்பீா் என்ற காவலா் தாக்கினாா். மேலும், அவா்களின் தள்ளுவண்டிகளை கீழே தள்ளினாா். இதனால், அந்த தள்ளு வண்டிகள் சேதமடைந்ததுடன், வியாரிகளின் காய்கறிகள் நாசமாகின. இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. போலீஸாரின் செயலைப் பலரும் விமா்சித்திருந்தனா். இந்நிலையில், காவலா் ராஜ்பீரை தில்லி காவல் துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை உயரதிகாரி கூறுகையில் ‘காவல் துறையினா் அடவாடித்தனமான செயல்களில் ஈடுபடுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. மக்களை மனிதாபிமானத்துடன் அணுகுமாறு காவலா்களை அறுவுறுத்தியுள்ளோம். தள்ளுவண்டிகளை சேதப்படுத்திய காவலரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com