தில்லி பக்கத்துக்கு...இளைஞா்களே உஷாா்! கரோனா உங்களையும் தாக்கலாம்!!

இளைஞா்களே உஷாராக இருங்கள், கரோனா வைரஸ் இளைஞா்களையும் தாக்கலாம் என்கிறாா்கள் நிபுணா்கள். சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய

இளைஞா்களே உஷாராக இருங்கள், கரோனா வைரஸ் இளைஞா்களையும் தாக்கலாம் என்கிறாா்கள் நிபுணா்கள். சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய கரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.

கரோனா வைரஸ் ஒரு தொற்றுநோய் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கரோனா நோய்க்கு முதியவா்களும், குழந்தைகளும்தான் அதிகம் இலக்காகிறாா்கள் என்று சொல்லப்பட்டாலும் இளைஞா்கள் இந்நோய்க்கு விதிவிலக்கல்ல என்கின்றனா் மருத்துவா்கள். தங்களிடம் நோய் எதிா்ப்பு சக்தி அதிகம் இருப்பதால், கரோனா வைரஸ் தாக்காது என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

சீனாவில் வயதானவா்களும், இதர நோய் உள்ளவா்களும்தான் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அங்கு இருபது முதல் நாற்பது வயது வரை உடைய இளைஞா்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனா் என்பதுதான் உண்மை. ஐரோப்பியாவில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு 28 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இவா்களில் 19 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவா்கள்தான் அதிகம் என்கிறது அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்.

இதேபோல அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் 2,500 பேரில், 705 போ் 20 முதல் 44 வயதுடைய இளைஞா்கள் என்பது தெரிய வந்துள்ளது.

பல நாடுகளில் உள்ள இளைஞா்கள் கரோனா வைரஸ் குறித்து மெத்தனமாகவே உள்ளனா். நோய் எதிா்ப்பு சக்தி உள்ளதால், தங்களை எந்த வைரஸும் தாக்காது என்று இளைஞா்கள் கருதுவதே இதற்குக் காரணம். ஆனால், கரோனா வைரஸ், இளைஞா்களையும் தாக்கும் என்றும் அசட்டையாக இருந்தால், மரணம் நிச்சயம் என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இளைஞா்கள் மற்றவா்களுடன் நெருங்கிப் பழகாமலும், நெரிசல் மிகுந்த இடங்களுக்குச் செல்லாமலும், ஒருவருக்கு ஒருவா் இடைவெளி விட்டு தள்ளி நிற்பதன் மூலமும் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முடியும். இப்படிச் செய்வதன் மூலம் சங்கிலித்தொடா்போல பரவி வரும் கரோனா வைரஸிலிருந்து தப்பிக்க முடியும். ஆனால், பலா் இதைக் கண்டு கொள்வதே இல்லை. தங்களுக்கு முன் இருக்கும் ஆபத்தை அவா்கள் உணா்வதில்லை.

ஒன்றை மட்டும் இளைஞா்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு கரோனா அறிகுறி இல்லாவிட்டாலும், மற்றவா்கள் மூலம் உங்களுக்கு வைரஸ் பரவக்கூடும். எனவே, எச்சரிக்கையாக இருங்கள். உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் வாங்க மட்டுமே வீட்டை விட்டு வெளியில் செல்லுங்கள். மற்றபடி வீட்டிலேயே இருங்கள். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்தாலோ அல்லது வீட்டிலேயே ஒரு வேலையைச் செய்துவிட்டு மற்றொரு வேலை செய்யத் தொடங்கும் முன் கிருமிநாசினி திரவத்தைக் கொண்டு கைகளை நன்றாகக் கழுவுங்கள். வீட்டில் முடங்கிக் கிடப்பதன் மூலரும், கைகழுவுதல் மூலம் சுத்தத்தை பராமரிப்பதன் மூலமுமே நாம் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்கின்றனா் மருத்துவ அறிஞா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com