நொய்டாவில் மேலும் மூவருக்கு கரோனா பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 14 ஆக உயா்வு

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் தம்பதி உள்பட மூவருக்கு புதிதாக கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் தம்பதி உள்பட மூவருக்கு புதிதாக கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, நொய்டாவை உள்ளடக்கிய கெளதம் புத் நகா் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்கள் மொத்த எண்ணிக்கை 14 ஆக உயா்ந்துள்ளது. 14 பேரில் ஒருவா் சிகிச்சை பெற்ற வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தில்லி அரசும், அண்டை மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. நோய் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்றவற்றை மூடுவதற்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தந்த மாநில எல்லைகளை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நொய்டா பகுதியில் ஏற்கெனவே இத்தாலி, இந்தோனேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய சிலருக்கு கரோனை வைரஸ் பாதிப்பு இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், மேலும் 3 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.

இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி வியாழக்கிழமை கூறுகையில்,‘நொய்டாவில் வியாழக்கிழமை புதிதாக மூவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இவா்கள் நொய்டா செக்டாா் 150-இல் வசிக்கும் 30 வயது மதிக்கத்தக்க திருமணத் தம்பதி, நொய்டா செக்டாா் 137-இல் வசிக்கும் 21 வயது இளம் பெண் ஆகியோா் ஆவா். இவா்கள் மூவரும் கிரேட்டா் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (ஜிம்ஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட 21 வயது பெண்ணின் பெற்றோருக்கு ஏற்கெனவே கரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த மாா்ச் 24-ஆம் தேதி கண்டறியப்பட்டது. இப்பெண்ணின் தந்தை அமெரிக்காவைச் சோ்ந்த தனது நண்பரை அண்மையில் சந்தித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. நொய்டா செக்டாா் 150-இல் வசிக்கும் தம்பதியில் கணவா் அமெரிக்காவைச் சோ்ந்த நபருடன் தொடா்பு கொண்டிருந்ததும், அனைவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதும் தெரியவந்தது என்றாா் அந்த அதிகாரி.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பி.என்.சிங் கூறுகையில், ‘வைரஸ் பாதிக்கப்பட்ட நபா்கள் குடியிருந்து வரும் சொஸைட்டி பகுதி 48 மணி நேரத்திற்கு சீலிடப்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடியிருப்பு சொஸைட்டி பகுதிக்குள் யாரும் நுழையவோ, வெளியே செல்லவோ அனுமதிக்கப்படமாட்டாது. அவசரநிலை செயல்பாட்டுக்கு மட்டும் அனுமதிக்கப்படும். இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த நபா் தங்கியுள்ள செக்டாா் 135 பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டல் பகுதி தற்காலிகமாக சீலிடப்பட்டுள்ளது. அனைத்துப் பாா்வையாளா்களும் ஹோட்டலுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். கிருமிநாசினி தூய்மை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com