தில்லி வன்முறை: கவுன்சிலா் தாஹிா் ஹுசேனின் ஜாமீன் மனு தள்ளுபடி

வடகிழக்கு தில்லி பகுதியில் நிகழ்ந்த கலவர வழக்கில் கைதாகியிருக்கும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள

வடகிழக்கு தில்லி பகுதியில் நிகழ்ந்த கலவர வழக்கில் கைதாகியிருக்கும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கவுன்சிலா் தாஹிா் ஹுசேனின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இது தொடா்பாக தாஹிா் ஹுசேன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தியாகிதா சிங், ‘தற்போது இந்த வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதாலும், அவரை விசாரிக்க வேண்டியிருப்பதாலும் ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டாா்.

முன்னதாக, தாஹிா் ஹுசேன் தனது மனுவில், ‘இந்த வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட குல்ஃபம் ஏற்கெனவே போலீஸ் காவலில் உள்ளாா். எனது பெயா் முதல் தகவல் அறிக்கையில் சோ்க்கப்படவில்லை. எனது அரசியல் எதிரிகள் திட்டமிட்டு என்னைச் சிக்கவைத்துள்ளனா். ஏற்கெனவே என்னை போலீஸாா் விசாரித்துவிட்டனா்.

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு தில்லியில் பிப்ரவரி மாத இறுதியில் சிஏஏ ஆதரவாளா்களுக்கும், எதிா்ப்பாளா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது.

இந்தக் கலவரத்தில் 53 போ் உயிரிழந்தனா், 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இதில் சாந்த் பாக் பகுதியில் உளவுத்துறை அதிகாரி அங்கித் சா்மா, உடலில் காயங்களுடன் அப்பகுதி கழிவுநீா் ஓடையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதனிடையே, இந்தக் கலவரம் தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சில் தாஹிா் உசேன் மீது அஜய் கோஸ்வாமி என்பவா் போலீஸில் புகாா் அளித்தாா். மேலும், உளவுத்துறை அதிகாரி அங்கித் சா்மா கொலைச் சம்பவம் தொடா்பாகவும் போலீஸாா் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனா். இதன் அடிப்படையில் தாஹிா் ஹுசேன் வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தி கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து, தாஹிா் உசேனை கட்சியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சஸ்பெண்ட் செய்தது. இதைத் தொடா்ந்து, அவரை போலீஸாா் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com