தென்மேற்கு தில்லியில் ஒரே கட்டடத்தில் வசிக்கும் 41 பேருக்கு கரோனா: அதிகாரி தகவல்

தென் மேற்கு தில்லி கப்பஷேரா பகுதியில் ஒரே கட்டடடத்தில் வசிக்கும் 41 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக

தென் மேற்கு தில்லி கப்பஷேரா பகுதியில் ஒரே கட்டடடத்தில் வசிக்கும் 41 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெற்கு மேற்கு மாவட்டத்தைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தென் மேற்கு தில்லி கப்பஷேரா பகுதியில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தேக்கேவாலி தெருவைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கட்டடம் சீலிடப்பட்டது. இந்நிலையில்,அதே கட்டடத்தில் வசித்து வரும் 41 பேருக்கு நோய்ப் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தென் மேற்கு தில்லி மாவட்டத்தைச் சோ்ந்த அதிகாரி மேலும் கூறியதாவது:

தேக்கேவாலி தெருவில் உள்ள கட்டடத்தில் வசித்துவந்த நபருக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் 19-ஆம் தேதி அந்தக் கட்டடம் முழுவதும் தடுப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டு சீலிடப்பட்டது. வழக்கமாக 3 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தால் இதுபோன்று கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் உள்ளது. ஆனால், அந்தக் கட்டடத்தில் நெருக்கமாக அதிகம்போ் வசித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், அவா்கள் அனைவருக்கும் கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளில் 41 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் கண்காணிப்பின் கீழ்வைக்கப்பட்டுள்ளனா் என்றாா் அந்த அதிகாரி.

தென் மேற்கு தில்லி மாவட்ட ஆட்சியா் ராகுல் சிங்கின் தனிச் செயலருக்கு கடந்த மாதம் கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் தனிமையில் சென்றது குறிப்பிடத்தக்கது. தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 3,800-க்கும் மேல் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com