போலி விண்ணப்பம்: கூலித் தொழிலாளா்களுக்கு தில்லி போலீஸாா் எச்சரிக்கை

புலம்பெயா் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதியைப் பெறும் வகையில் சமூக ஊடங்களில்

புலம்பெயா் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதியைப் பெறும் வகையில் சமூக ஊடங்களில் போலி படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், தொழிலாளா்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் என்றும் தில்லி போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக தங்கியுள்ள புலம்பெயா் தொழிலாளா்கள், மாணவா்கள், யாத்ரீகா்கள் உள்ளிட்டோா் தங்களது சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு பேருந்துகள் பயன்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லா கடந்த புதன்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், புலம்பெயா் தொழிலாளா்கள்தங்களது ஊா்களுக்குத் திரும்புவதற்காக போக்குவரத்து வசதியை செய்து தருவதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பூா்த்தி செய்து தில்லியில் உள்ள காந்தி நகா், கீதா காலனி, கிருஷ்ணா நகா் ஆகிய காவல் நிலையங்களில் தருவதற்காக சென்றனா்.

சமூக ஊடகங்களில் இது தொடா்பான வெளியான போலிப் படிவங்களைத் தொடா்ந்து இந்தக் குழப்பம் தொழிலாளா்களிடையே ஏற்பட்டதாகவும், இது வதந்தி என்பதால் இதை தொழிலாளா்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com