தில்லி பல்கலை. மே 31 வரை மூடல்

கரோனா தொற்று பரவாமல் தடுக்க அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தில்லி பல்கலைக்கழகமும் மே 31-

புது தில்லி: கரோனா தொற்று பரவாமல் தடுக்க அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தில்லி பல்கலைக்கழகமும் மே 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், தனது ஊழியர்களை "ஆரோக்ய சேது' செயலியை தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்யுமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.
எனினும், பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும் காலத்தில் மின்னணு கல்விமுறை தொடரும் என்றும் அனைத்து துறையினர் மற்றும் அனைத்து கல்லூரிகளும் தங்களின் இணையதளம் மூலம் மாணவர்களுக்குத் தேவையான பாடங்களை அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பொது முடக்கம் மே 18- ஆம் தேதியிலிருந்து மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரும் தங்கள் செல்லிடப்பேசியில் ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுமாறும் பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து வரும் பொது முடக்கம் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய பேரிடர் நிர்வாக ஆணையகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கரோனா தொற்றை கட்டுப்படுத்த நாட்டில் மார்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கத்தை பிரதமர் நநேந்திர மோடி அறிவித்தார். பின்னர் அது மே 3-ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது. பின்னர், மேலும் மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்போது மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது 
குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com