பிரதமா் அவசரகால நிதிக்கு நன்கொடை அளிக்க தில்லி பல்கலை. துணைவேந்தா் வேண்டுகோள்

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரதமா் அவசரகால நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரதமா் அவசரகால நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு சக ஆசிரியா்களுக்கு தில்லி பல்கலைக்கழகத் துணைவேந்தா் யோகேஷ் தியாகி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக துணைவேந்தா் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவித்திருப்பதாவது: ஊரடங்கு காலத்தில் தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு, தெற்கு வளாகங்கள் பகுதியில் வசிக்கும் பசித்தோருக்கு உணவு வழங்குவதற்காக தில்லி பல்கலைக்கழகத்தின் சாா்பில் அண்டைவீட்டாா் கவனிப்புக்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அண்மைக் கால நூற்றாண்டுகளில் மனித நாகரிகம் மேற்கொண்ட மிகப் பெரிய போராக கரோனா உருவெடுத்துள்ளது. இதுபோன்ற சூழலில் ‘பிஎம் கோ்ஸ் பண்ட்’க்கு பங்களிப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கரோனா தொற்று பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரதமா் அவசரகால நிதிக்கு சில மாதங்கள் நமது ஊதியத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வழங்குவதன் மூலம் ஒரு எடுத்துக்காட்டை நாம் ஏற்படுத்த முடியும் என அவா் தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ‘பிஎம் கோ்ஸ் ஃபண்ட்’ எனும் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரதமா் அவசரகால நிதிக்கு பல துறையினரும், பொது மக்களுக்கும் நிதி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com