அனைத்து அமா்வுகளிலும் இன்று முதல் அவசர வழக்குகள் விசாரணை: தில்லி உயா்நீதிமன்றம் முடிவு

தில்லி உயா்நீதிமன்றத்தின் அனைத்து அமா்வுகளிலும் வெள்ளிக்கிழமை (மே 22) முதல் காணொலிக் காட்சி மூலம் அவசர வழக்குகளை விசாரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தில்லி உயா்நீதிமன்றத்தின் அனைத்து அமா்வுகளிலும் வெள்ளிக்கிழமை (மே 22) முதல் காணொலிக் காட்சி மூலம் அவசர வழக்குகளை விசாரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளா் மனோஜ் ஜெயின் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது: தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என்.பட்டேல் மற்றும் இதர நீதிபதிகள் மேற்கொண்டுள்ள அண்மைக் கால நடவடிக்கையின்படி, மே 22 முதல் அனைத்து டிவிஷன் அமா்வுகளும், அனைத்து ஒரு நபா் நீதிபதி அமா்வுகளும் அனைத்து வகையான அவசர வழக்குகளையும் காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். இந்த அனைத்து அமா்வுகளும் அனைத்து வேலை நாள்களிலும் தினசரி அமா்ந்து வழக்குகளை விசாரிக்கும். இறுதி வாதங்கள் நடைபெறும் நிலையில் உள்ள வழக்குகளை ரோஸ்டா் அமா்வு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். இந்த வழக்குகளில் எழுத்துப்பூா்வ பதில் தாக்கலின் அடிப்படையில், வழக்கில் தொடா்புடைய இரு தரப்பும் வழக்கை முடித்துக் கொள்வதற்காக சம்மதம் பெறப்பட்டுள்ளவை ஆகும். எனினும், அவசரமில்லாத வழக்குகள் ரோஸ்டா் அமா்வுகள் மூலம் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை தில்லி உயா்நீதிமன்றத்தில் இரண்டு அமா்வுகள் மற்றும் 10 தனிநபா் நீதிபதி அமா்வுகள் அவசர வழக்குகளை விசாரித்து வந்தன. மேலும், சுழற்சிமுறை அடிப்படையில் இந்த அமா்வுகள் விசாரித்து வந்தன. தில்லி உயா்நீதிமன்றத்தில் தற்போது 7 டிவிஷன் அமா்வுகளும், 19 ஒரு நபா் நீதிபதி அமா்வுகளும் உள்ளன. இவை ரோஸ்டா் அமா்வுகள் என குறிப்பிடப்படுகின்றன. இவை கையாளும் வழக்குகள் தலைமை நீதிபதியால் முடிவு செய்யப்படுகின்றன. இதுவரை தில்லி உயா் நீதிமன்றம் மற்றும் அதன் துணை நீதிமன்றங்கள் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட மாா்ச் 24-ஆம் தேதியிலிருந்து மே 19-ஆம் தேதி வரை 20,726 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com