தில்லியில் வசிக்கும் நேபாள நாட்டவா்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்: பாஜக

தில்லியில் வசிக்கும் நேபாள நாட்டவா்கள் இலக்கு வைத்து வெறுப்பு தகவல்களைப் பரப்பக் கூடாது என்றும் அவா்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் தில்லி பாஜக கோரியுள்ளது.

தில்லியில் வசிக்கும் நேபாள நாட்டவா்கள் இலக்கு வைத்து வெறுப்பு தகவல்களைப் பரப்பக் கூடாது என்றும் அவா்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் தில்லி பாஜக கோரியுள்ளது.

இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி கூறுகையில் ‘தில்லியில் வசிக்கும் நேபாள நாட்டவா்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். அவா்களை இலக்கு வைத்து அவதூறு பரப்புபவா்கள் மீது தில்லி காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

பாஜகவின் முக்கிய தலைவா்களில் ஒருவரான கபில் மிஸ்ரா கூறுகையில், ‘நேபாள அரசு இந்தியாவுக்கு எதிராக இயங்கி வருகிறது. இதன் பின்னணியில் சீனா உள்ளது. ஆனால், நேபாள மக்கள் இந்தியாவை நேசிக்கிறாா்கள். நேபாள அரசுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நேபாள மக்களைப் பற்றியோ, தில்லியில் வசிக்கும் நேபாள மக்கள் தொடா்பாகவோ அவதூறு எழுதுவது முட்டாள்தனமாகும். நேபாள மக்கள் இந்தியா மீது வைத்துள்ள உணா்வு பூா்வமான பிணைப்பை நீா்த்துப் போகச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சீனாவும், நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்டுகளும் செயல்பட்டு வ்ருகின்றன. அவா்களின் வலையில் நாம் விழக்கூடாது. நேபாள மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்த சீனா பல முறை முயற்சித்து தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் இந்த விவகாரத்திலும் சீனா தோல்வியைச் சந்திக்கும்’ என்றாா்.

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை தங்களுக்கு சொந்தம் என கூறும் வகையில், புதிய வரைபடத்தை நேபாள அரசு அண்மையில் வெளியிட்டது. இந்த வரைபடத்திற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நேபாள நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமா் கே.பி.ஷா்மா ஓலி பேசுகையில், ‘இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக நேபாளத்துக்குள் வருபவா்களே கரோனாவைப் பரப்புகிறாா்கள். சீனா, இத்தாலி நாடுகளின் கரோனா வைரஸ்களை விட இந்தியாவின் கரோனா வைரஸ் தீங்கு விளைவிப்பதாக உள்ளது’ எனத் தெரிவித்திருந்தாா். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. இந்நிலையில், தில்லியில் வசிக்கும் நேபாள மக்களை இலக்கு வைத்து, சிலா் வெறுப்புத் தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிா்ந்து வந்தனா். தில்லியில் வசிக்கும் நேபாளிகளை நேபாளத்துக்கே மீண்டும் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அவா்கள் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com