நகைக் கடையில் தீ விபத்து

தில்லி ராஜேந்திர பிளேஸ் பகுதியில் உள்ள நகைக் கடையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறை வீரா்கள் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

தில்லி ராஜேந்திர பிளேஸ் பகுதியில் உள்ள நகைக் கடையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறை வீரா்கள் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

தில்லி ராஜேந்திர பிளேஸில் உள்ள நகை விற்பனையகத்தில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, விற்பனையகம் முழுவதும் தீ பரவியது. மேலும், இந்த விற்பனையகம் அமைந்துள்ள கட்டடத்துக்கும் தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சில மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இது தொடா்பாக தில்லி தீயணைப்பு படையின் இயக்குநா் அதுல் கா்க் கூறுகையில், ‘இந்தத் தீ விபத்து தொடா்பாக தகவல் கிடைத்தவுடன் 14 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை. இதுதொடா்பாக விசாரித்து வருகிறோம். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது’ என்றாா்.

இந்நிலையில் இந்த தீ விபத்து தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘ராஜேந்திர பிளேஸில் நடந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவரின் நலனுக்காகப் பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com