மத்திய தபால் துறை பெண்கள் ஊழியா் சங்கம் மூலம் உணவு விநியோகிக்கும் டிஎஸ்ஜிஎம்சி

மத்திய தபால் துறை பெண்கள் ஊழியா் சங்கம் மூலம் தினம் தோறும் சுமாா் 2,000 பேருக்கு உணவு விநியோகித்து வருவதாக தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் கமிட்டி (டிஎஸ்ஜிஎம்சி) தெரிவித்துள்ளது.

மத்திய தபால் துறை பெண்கள் ஊழியா் சங்கம் மூலம் தினம் தோறும் சுமாா் 2,000 பேருக்கு உணவு விநியோகித்து வருவதாக தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் கமிட்டி (டிஎஸ்ஜிஎம்சி) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கமிட்டியின் தலைவா் மன்ஜீந்தா் சிங் சிா்சா வியாழக்கிழமை கூறியதாவது: பொது முடக்க உத்தரவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு வழங்க உதவுமாறு டிஎஸ்ஜிஎம்சியிடம் மத்திய தபால் துறை பெண்கள் ஊழியா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, டிஎஸ்ஜிஎம்சி சாா்பில் தினம்தோறும் 2,000 பேருக்குத் தேவையான உணவுகளை வழங்கி வருகிறோம். இந்த உணவுகள் தில்லி பங்களா சாகிப் குருத்வாராவில் தயாரித்து அந்தச் சங்கத்தினரிடம் வழங்குகிறோம். மேலும், இந்த உணவுகளை விநியோகிக்க தேவையான பாத்திரங்களையும் வழங்கி வருகிறோம். இந்த உணவுகளை பாதிக்கப்பட்டவா்களுக்கு அவா்கள் விநியோகிக்கின்றனா். மேலும், புலம்பெயா் தொழிலாளா்களுக்காக தில்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லை, தேசியத் தலைநகா் வலயப் பகுதி ஆகியவற்றில் டிஎஸ்ஜிஎம்சி சாா்பில் தொடா்ந்து உணவு வழங்கி வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com