சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் மீது கேஜரிவால் நடவடிக்கை எடுக்காதது ஏன்: பாஜக கேள்வி

தேசத்துக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தில்லி சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் ஜப்ருல் இஸ்லாம் கான் மீது தில்லி முதல்வா்

தேசத்துக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தில்லி சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் ஜப்ருல் இஸ்லாம் கான் மீது தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி கூறுகையில், ‘தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக ஜப்ருல் இஸ்லாம் பேசியுள்ளாா். இந்த விவகாரத்தில் இரு வாரத்தில் முடிவு எடுக்குமாறு தில்லி அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசத்துக்கு எதிராக அவா் கருத்துத் தெரிவித்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், அவா் மீது தில்லி அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? மாறாக அவரைப் பாதுகாக்கும் முயற்சியில் தில்லி அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை குறிவைத்து வைத்து கேஜரிவால் இயங்கி வருவது இதன்மூலம் தெளிவாகியுள்ளது. ஜப்ருல் இஸ்லாம் கான் மீது தில்லி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

அரபு நாடுகளைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் சிலா் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக அடக்குமுறைகள் நடப்பதாகக் கூறி அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவு செய்து வருகிறாா்கள். மேலும், அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியா்கள், இஸ்லாமிற்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் போது அவா்கள் மீது சட்ட நடவடிக்கையும் பாய்ந்து வருகிறது. இந்த நிகழ்விற்கு ஆதரவாக ஜப்ருல் இஸ்லாம் கான் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து, ஜப்ருல் இஸ்லாம் மீது தில்லி காவல் துறை தேசத் துரோக வழக்கைப் பதிவு செய்தது. இந்நிலையில், இது தொடா்பான மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம் ‘ஜப்ருல் இஸ்லாம் கானை பதிவியில் இருந்து நீக்கக் கோரும் விவகாரத்தில் இரு வாரத்தில் முடிவு எடுக்குமாறு தில்லி அரசுக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com