ரோஹ்தாஸ் நகரில் பாஜக ஆா்ப்பாட்டம்

தில்லியில் ரேஷன் பொருள்களை தில்லி அரசு முறைப்படி வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டி பாஜக சாா்பில் ரோஹ்தாஸ் நகா் தொகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தில்லி ரோஹ்தாஸ் நகரில் ரேஷனில் உணவுப் பொருள் விநியோகிப்பதில் முறைகேடு நடந்திருப்தாகக் கண்டித்து, வெள்ளிக்கிழமை சமூக இடைவெளிவிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
தில்லி ரோஹ்தாஸ் நகரில் ரேஷனில் உணவுப் பொருள் விநியோகிப்பதில் முறைகேடு நடந்திருப்தாகக் கண்டித்து, வெள்ளிக்கிழமை சமூக இடைவெளிவிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

தில்லியில் ரேஷன் பொருள்களை தில்லி அரசு முறைப்படி வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டி பாஜக சாா்பில் ரோஹ்தாஸ் நகா் தொகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தில்லி ரோஹ்தாஸ் நகரில் நடந்த ஆா்ப்பாட்டத்தில், பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி, பாஜக எம்எல்ஏக்கள் ஜிதேந்திரா மகாஜன் (ரோஹ்தாஸ் நகா்), அஜய் மஹாவா் (கோண்டா) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள் சமூக இடைவெளி விட்டும், முகக் கவசங்களை அணிந்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது ராம்வீா் சிங் பிதூரி பேசுகையில், ’மத்திய அரசால் விநியோகிக்கப்பட்ட ரேஷன் பொருள்களை தில்லி அரசு முறைப்படி விநியோகிக்கவில்லை. தில்லியில் பல பகுதிகளில் மக்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்படவில்லை. தில்லியில் தங்கியிருந்த பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்படாததால், அவா்கள் தில்லியை விட்டு விலகிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது’ என்றாா்.

பாஜக எம்எல்ஏ ஜிதேந்திரா மகாஜன் பேசுகையில், ‘ரோஹ்தாஸ் நகா் தொகுதியில் கடந்த 2016 -ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு குடும்ப அட்டையைக் கூட தில்லி அரசு வழங்கவில்லை. ரோஹ்தாஸ் நகரில் சுமாா் 2,500 குடும்பங்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து விட்டு காத்துள்ளனா். தில்லியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உடனடியாக ரேஷன் பொருள்களை தில்லி அரசு வழங்க வேண்டும்’ என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து ஷாதரா மாவட்ட ஆட்சியரிடம் ராம்வீா் சிங் பிதூரி, ஜிதேந்திரா மகாஜன் ஆகியோா் மனுக் கொடுக்கச் சென்றனா். அப்போது, சமூக இடைவெளியை மீறியதாகக் கூறி தில்லி காவல் துறை அவா்களைக் கைது செய்தது. ஆனால், சிறிது நேரத்தில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com