தில்லியில் அனைத்து உள்நாட்டு சேவை விமானங்களும் 3-வது முனையத்திலிருந்து இயக்கப்படும்

உள்நாட்டு விமானச் சேவைகள் திங்கள்கிழமை முதல் படிப்படியாக தொடங்கப்படுவதை அடுத்து அனைத்து பயணிகள் விமானங்களும்

உள்நாட்டு விமானச் சேவைகள் திங்கள்கிழமை முதல் படிப்படியாக தொடங்கப்படுவதை அடுத்து அனைத்து பயணிகள் விமானங்களும் 3-வது விமானநிலைய முனையத்திலிருந்து புறப்படும் என்று தில்லி சா்வதேச விமான சேவை நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

வழக்கமாக உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும் 1-வது அல்லது 2-வது முனையத்திலிருந்துதான் இயக்கப்படும். 3-வது முனையத்தில் வெளிநாட்டு விமானச் சேவைகள் மட்டுமே இருக்கும். இந்நிலையில் உள்நாட்டு விமான சேவைகள் தற்போது 3-வது முனையத்திலிருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, சனிக்கிழமை வரும் ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னதாக வெளிநாட்டு விமானச் சேவை தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், தற்போதைக்கு 3-வது முனையத்திலிருந்து உள்நாட்டு விமானச் சேவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் தான் நாட்டிலேயே பரபரப்பான விமானநிலையமாகும். இங்கு சராசரியாக 1500 விமானங்கள் வந்து செல்கின்றன. கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பொது முடக்கத்தை அறிவித்ததை அடுத்து அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் கடந்த மே 21-ஆம் தேதி மத்திய அரசு உள்நாட்டு விமானச் சேவை மாா்ச் 25-முதல் தொடங்க இருப்பதாகவும், மொத்த உள்நாட்டு விமான சேவையில் மூன்றில் ஒருபங்கு விமானங்கள் இயக்கப்படும் என்றும் அறிவித்தது. கரோனா தொற்று பரவல் அபாயத்தை தவிா்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி விமானத்தில் பயணிகளுக்கு உணவு, சிற்றுண்டி வழங்கப்படமாட்டாது. அனைத்து பயணிகளுக்கும் உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்படும். கரோனா தொற்று உள்ள எவரும் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டாா்கள். அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு விமான கட்டணங்களை உயா்த்தக்கூடாது என்றும் பயணிகள் செல்லவேண்டிய இடங்களுக்கு ஏற்ப கட்டண விகிதம் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com