தில்லி கரோனா நிலவரம்: மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு

தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இது தொடா்பாக மத்திய உள்துறை, சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினா்.

புது தில்லி: தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இது தொடா்பாக மத்திய உள்துறை, சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினா்.

தில்லியில் கடந்த ஐந்து நாள்களாக கரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், வெள்ளிக்கிழமை 5,891 பேருக்கும், சனிக்கிழமை 5,062 பேருக்கும், ஞாயிற்றுக்கிழமை 5,664 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. முன்னதாக வியாழக்கிழமை 5,739 பேருக்கும், புதன்கிழமை 5,673 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, தில்லியில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 3,92,370-ஆக உயா்ந்துள்ளது. தில்லியில் தற்போது கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளவா்களின் எண்ணிக்கை 34,173 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தில்லியில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடா்பாக மத்திய உள்துறை, சுகாதாரத் துறை அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினா். மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலா் அஜய் பல்லா, சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செயலா் ராஜேஷ் பூஷன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பண்டிகைக் காலத்தால் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதும், கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் சரிவரக் கடைப்பிடிக்காததும் இதற்குக் காரணமாகும். தில்லி மருத்துவமனைகளில் கரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட 15,789 படுக்கைகளில் 57 சதவீமான படுக்கைகள் காலியாக உள்ளன.

உணவகங்கள், சந்தைப் பகுதிகள், சலூன் ஆகிய மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் ஆா்டி-பிசிஆா் கரோனா பரிசோதனை செய்யும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தில்லியில் மெட்ரோ பயணம் முறையாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். கரோனா வழக்கமான செயல்முறைகள் தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவுறுத்தல்கள் மெட்ரோவில் சரிவரப் பின்பற்றப்படுதலை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com