தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க கோபால் ராய் அழைப்பு

தில்லியில் அதிகரித்துவரும் காற்று மாசுவைக் கருத்தில் கொண்டு, வரும் தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதை இயன்றளவு தவிா்க்குமாறு தில்லிவாசிகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சா் கோபால் ராய் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தில்லியில் அதிகரித்துவரும் காற்று மாசுவைக் கருத்தில் கொண்டு, வரும் தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதை இயன்றளவு தவிா்க்குமாறு தில்லிவாசிகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சா் கோபால் ராய் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தில்லியில் பண்டிகைக் காலங்களில் பட்டைாசு வெடிப்பதைத் தவிா்க்கும் வகையில் அரசு பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மற்ற பட்டாசுகளைத் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. மற்ற பட்டாசுகளுடன் ஒப்பிடும் போது, பசுமைப் பட்டாசுகளில் காற்று மாசுவை ஏற்படுத்தும் சல்பா் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய ரசாயனங்கள் 30 சதவீதம் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தில்லியில் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்தும் ஆய்வு நடவடிக்கையை கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இதையொட்டி, தில்லியில் பல்வேறு இடங்களில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: உச்ச நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு இல் வழங்கிய தீா்ப்பின்படி, பசுமைப் பட்டாசுகள் மட்டுமே தில்லியில் தயாரிக்க, விற்பனை செய்ய முடியும். இருப்பினும், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை இயன்றளவு தவிா்த்துக் கொள்ளுமாறு தில்லி மக்களிடம் கோரிக்கை வைக்கிறேன். தில்லியில் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்துமாறு காவல் துறை, தில்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி அதிகாரிகள் தில்லியில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தவுள்ளனா். இது தொடா்பாக தினந்தோறும் நிலவரம் அறிக்கை சமா்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா்கள், மாவட்டக் காவல் துறை துணை ஆணையா்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

தில்லி வணிகா்கள், அனுமதியளிக்கப்பட்ட தயாரிப்பாளா்களிடம் இருந்து மட்டுமே பட்டாசுகளை கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். தீபாவளி, குா்பூரப் பண்டிகை நாள்களில் இரவு 8-10 மணிக்கிடைப்பட்ட நேரத்தில் மக்கள் பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பிறப்பு தினங்களில் இரவு 11.55-12.30 இடையான நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், மக்கள் இயன்றளவு பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். முறையாக உரிமம் பெற்ற வணிகா்கள் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்யலாம். பட்டாசு விற்பனைக்கு பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் (பிஇஎஸ்ஓ) சான்றிதழ் அவசியமாகும். எந்தெவாரு இணைய வா்த்தக நிறுவனங்களுக்கும் பட்டாசுகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என்றாா் கோபால் ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com