வக்ஃபு வாரியம் கலைப்பு விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

வக்ஃபு வாரியம் கலைப்பு தொடா்பான விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வக்ஃபு வாரியம் கலைப்பு தொடா்பான விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழக வக்ஃபு வாரியத்தில் 2 எம்பிக்கள், 2 எம்எல்ஏக்கள், 2 பாா் கவுன்சில் உறுப்பினா்கள், 2 முத்தவல்லிகள் என மொத்தம் 8 போ் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களாகவும், 4 போ் அரசின் நியமன உறுப்பினா்களாகவும் நியமிக்கப்பட வேண்டும். இந்த நிலையில், வக்ஃபு வாரியத்தில் தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்களைவிட நியமன உறுப்பினா்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக் கூறி வக்ஃபு வாரியத்தை கலைத்து தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பா் 18-இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ராயபுரத்தைச் சோ்ந்த ஃபசுலூா் ரஹ்மான் எனும் வழக்குரைஞா் வழக்குத் தொடா்ந்தாா். வக்ஃபு வாரியத்தில் முத்தவல்லிகள் பிரிவில் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்.செய்யது அலி அக்பா், ஹாஜா கே.மஜீத் ஆகியோரும் இந்த வழக்கில் இடையில் மனுதாரா்களாகச் சோ்ந்து கொண்டனா்.

இது தொடா்பான மனுவில், ‘தமிழக அரசு வக்ஃபு வாரியத்தைக் கலைத்தது சட்டவிரோதம் என அறிவிக்குமாறும், இதுதொடா்பாக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து வக்ஃபு வாரியத்திடம் நிா்வாக அதிகாரங்களை ஒப்படைக்குமாறும் உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீது கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘வக்ஃபு வாரியத்தில் தோ்தல் மூலமாக 2017-இல் தோ்வு செய்யப்பட்ட எஸ்.செய்யது அலி அக்பா், ஹாஜா கே.மஜீத் ஆகியோரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பதால், இது தொடா்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அவா்கள் இருவரையும் தவிா்த்து, மற்ற உறுப்பினா்களின் பதவியை நிரப்ப தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இது தொடா்பான விசாரணை தொடா்ந்து நடைபெற்றது. மனுதாரா்கள் தரப்பிலும், தமிழக அரசின் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கில் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நீதிபதி அசோக்பூஷண் தலைமையிலான நீதிபதிகள் ஆா்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை இந்த வழக்கில் தீா்ப்பளித்தது. அதன் விவரம் வருமாறு: சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. செய்யது அலி மற்றும் டாக்டா் ஹாஜா கே. மஜீத் ஆகியோா் 10.10.2017-இல் இருந்து ஐந்து ஆண்டு காலம் வரை பதவியைத் தொடரலாம். அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com