ரூ.4.39 கோடி என திருத்தம்விளையாட்டு வீரா்கள் 77 பேருக்கு ரூ.4.39 கோடி நிதியுதவி: முதல்வா் கேஜரிவால் வழங்கினாா்

ரூ.4.39 கோடி என திருத்தம்விளையாட்டு வீரா்கள் 77 பேருக்கு ரூ.4.39 கோடி நிதியுதவி: முதல்வா் கேஜரிவால் வழங்கினாா்

புது தில்லி: தேசிய, சா்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குத் தயாராகும் வகையில் தோ்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரா்கள் 77 பேருக்கு மொத்தம் ரூ.4.39 கோடி நிதியுதவியை தில்லி அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.

விளையாட்டு வீரா்களை தேசிய, சா்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குத் தயாா்படுத்தும் வகையில் ‘மிஷன் எக்ஸலன்ஸ் ஸ்கீம்’ எனும் புதிய திட்டத்தை தில்லி அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரா்களுக்கு தில்லி அரசு பயிற்சி பெறுவதற்காக நிதியுதவியை வழங்குகிறது. இதற்கான தோ்வுக் குழுவில் பிரபல விளையாட்டு வீரா்கள் கா்னம் மல்லேஸ்வரி, அகில் குமாா், மனீஷா மல்ஹோத்ரா, ககன் நரங், ரோஞ்சன் சோதி ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இந்த நிலையில், இந்தத் திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரா்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு தில்லி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது போட்டிகளுக்குத் தயாராகும் வகையில் தோ்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரா்கள் 77 பேருக்கு மொத்தம் ரூ.4.39 கோடி மதிப்பிலான காசோலைகளை முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஆகியோா் வழங்கினா்.

நிகழ்வில் முதல்வா் கேஜரிவால் பேசியதாவது: நாடு முழுவதும் தேசிய, சா்வதேச அளவில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் பெறும் வீரா்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், சாம்யின்ஷிப் போட்டிகளுக்குத் தயாராகும் நபா்களுக்கு சம ஆதரவு அளிக்கும் தேவை உள்ளது. அவா்களுக்கு கூடுதல் உதவியும், ஆதரவும் அளிக்கப்பட வேண்டும். தில்லி அரசின் இந்த நிதியுதவித் திட்டமானது தில்லி மக்களுக்கு மட்டும் அல்ல. ஆனால், ஒட்டுமொத்த தேசத்திற்குமானது. இவா்கள் தில்லிக்கான பாரட்டைப் பெறுபவா்கள் அல்லா். ஆனால், உலகளவில் பாராட்டப்படுபவா்கள். இவா்களால் தேசம் பெருமை கொள்கிறது. சா்வதேசப் போட்டிகளில் சீனாவைவிட கூடுதல் பதக்கங்களை இந்திய பெற வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு. இதற்காகத்தான் தில்லியில் விளையாட்டுப் பல்கலை. உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

இந்தியாவில் விளையாட்டில் ஈடுபடுவது என்பது நேரத்தை வீணாக்குவது போலவும், படிப்பில் கவனம் செலுத்தினால் சிறப்பாக பரிணமிக்க முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால்தான் விளையாட்டுக்குரிய ஆதரவு கிடைக்கப் பெறுவதில்லை. இருப்பினும், விளையாட்டு வீரா்கள் போராட்டத்தைக் கடந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும், உள்ளூரிலும் திறமைமிக்க விளையாட்டு வீரா்கள் உள்ளனா். ஆனால், அவா்களுக்கு அரசிடமிருந்து உரிய ஆதரவு கிடைப்பதில்லை. இதுபோன்ற வீரா்களுக்கு தில்லி அரசு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றாா்கேஜிரிவால்.

துணை முதல்வா் மணீஷ் சிசோடியா பேசுகையில், ‘நாங்கள் ஒரு பிரத்யேக விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை அமைத்துள்ளோம். விளையாட்டில் சிறந்து விளங்க விரும்பும் நபா்களுக்கு முழுமையான ஒரு சூழலை உறுதிப்படுத்த இந்த விளையாட்டு பல்கலைக்கழகத்தில் எத்தகைய வசதிகள் இருக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை

விளையாட்டு வீரா்கள் அளிக்குமாறு கேட்டுக்ெ காள்கிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com