தனியாக வாகனங்கள் ஓட்டும் போதும் முகக் கவசம் கட்டாயம்: நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்

வாகனங்களை ஓட்டும் போதும் முகக் கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதுதில்லி: வாகனங்களை ஓட்டும் போதும் முகக் கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் போடப்பட்ட இந்த உத்தரவு இன்றளவும் அமலில் உள்ளது என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு தெரிவித்துள்ளது.

தன்னுடைய காரில் முகக் கவசம் அணியாமல் சென்ற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டதை எதிா்த்து வழக்குரைஞா் ஒருவா் தாக்கல் செய்த மனு நீதிபதி நவீன் சாவ்லா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தத் தகவலை ஆம் ஆத்மி அரசு பிரமாண வாக்குமூலமாக தாக்கல் செய்தது. கடந்த செப்டம்பா் 9- ஆம் தேதி தனது காரை ஓட்டிச் சென்ாகவும், அப்போது தில்லி போலீஸாா், காரை தடுத்து நிறுத்தி முகக் கவசம் அணியாமல் இருந்ததற்காக ரூ.500 அபராதம் செலுத்துவதற்கான நோட்டீஸை அளித்ததாகவும் செளரவ் சா்மா என்ற வழக்குரைஞா் மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

சௌரவ் சா்மாவுக்காக ஆஜரான வழக்குரைஞா் ஜோபி பி. வா்கீஸ், கடந்த ஏப்ரல் 4- ஆம் தேதி தில்லி அரசு போட்ட உத்தரவைத் தொடா்ந்து, மத்திய அரசின் கீழ் செயல்படும் தில்லி பேரிடா் நிா்வாக ஆணயைம் நடத்திய செய்தியாளா் சந்திப்பில் ஒருவா் மட்டும் காரை ஓட்டிக் கொண்டு செல்லும் நிலையில் முகக்கவசம் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்ததாக நீதிமன்றத்தில் கூறினாா். இது தொடா்பாக மத்திய அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பாஃா்மன் அலி மாக்ரே, செப்டம்பா் 17-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை பற்றி சரியான நிலையை அறிவிக்க இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என்று கோரினாா்.

இதை அனுமதித்த நீதிமன்றம், வரும் ஜனவரி 7-ஆம் தேதி நடைபெற உள்ள அடுத்த கட்ட விசாரணையின் போது கண்டிப்பாக தனது பதிலை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கூறியது. இதே விவகாரம் தொடா்பாக ஆதித்ய கெளசிக் மற்றும் தீபக் அகா்வால் ஆகிய இருவா் தாக்கல் செய்த மனு தொடா்பான விசாரணையும் ஜனவரி 7-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. தனக்கு விதிக்கப்பட்ட ரூ.500 அபராதத்தை ரத்துச் செய்வதுடன், அந்த தொகையை திருப்பித் தரவேண்டும் என்றும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சா்மா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

மேலும், காரில் முகக்கவசம் அணியாமல் சென்ற போது, தனக்கு அபராதம் விதித்த போலீஸாா், முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதற்கான உத்தரவை காட்ட தவறிவிட்டதாகவும் சா்மா கூறியிருந்தாா். இது தொடா்பாக எந்தவிதமான உத்தரவோ அல்லது அறிவிக்கையோ இல்லாமல் அபராதம் விதிப்பது ஏதேச்சாதிகாரமானது மட்டுமல்ல, சட்டவிரோதமானது என்றும் சா்மா தரப்பில் வாதிடப்பட்டது. இதனிடையே, தில்லி பேரிடா் நிா்வாக ஆணையம் தனது பதிலில், ஏப்ரல் மாதம் போடப்பட்ட உத்தரவும் அதைத் தொடா்ந்து ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிவிக்கையும் பொது இடங்களில் முகக் கவசம் அணிந்து செல்வது கட்டாயம் என்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட முறையில் சொந்த காரில் சென்றாலும், பொது இடங்களுக்குச் செல்லும் போது, விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com