தலைநகரில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தில்லியில் திங்கட்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது. 10 நாள்களுக்குப் பிறகு காற்றின் தரம் மிகவும் பாதிப்படைந்ததாகவும், காற்றின் வேகம் குறைவதன் காரணமாக அடுத்து இரு தினங்கள் காற்றின்

புது தில்லி: தில்லியில் திங்கட்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது. 10 நாள்களுக்குப் பிறகு காற்றின் தரம் மிகவும் பாதிப்படைந்ததாகவும், காற்றின் வேகம் குறைவதன் காரணமாக அடுத்து இரு தினங்கள் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்குச் செல்லும் என அரசு நிறுவங்கள் தெரிவித்தன.

தில்லியிலுள்ள அரசு நிறுவனத்தின் காற்று மாசு கண்காணிப்பு நிலையங்களில் 38 நிலையங்களில் 14 நிலையங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் காணப்பட்டது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செல்லிடப்பேசி செயலி சமீா் தகவலின்படி திங்கட்கிழமை காலை காற்றின் தரக் குறியீடு 281 புள்ளிகளாக இருந்தது. இந்தக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 274 நாடாக இருந்தது சனிக்கிழமை 251 ஆகவும் வெள்ளிகிழமை 296ஆகவும் வியாழக்கிழமை 283 ஆகவும் புதன்கிழமை 711 ஆகவும் இருந்தது.

தில்லியில் உள்ள ஆனந்த் விஹாா், அசோக் விகாா் பவானா, துவாரகா, ஜஹாங்கிா்புரி, முன்ட்கா, நரேலா, ரோகிணி ஆகிய இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் காணப்பட்டது.

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்று தரக் கண்காணிப்பு அமைப்பான ‘சபா்’ தெரிவிக்கையில் சனிக்கிழமை பஞ்சாப், ஹரியாணா மற்றும் அதை ஒட்டியுள்ள பிராந்தியங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பு எண்ணிக்கை 649 ஆக இருந்தது. இது தற்போது 149 குறைந்துவிட்டது. எனினும், பயிா்களில் ஏற்பட்ட காற்று மாசுவால் தில்லியில் பி.எம். 2.5 மாசு சதவீதம் சனிக்கிழமை 12 சதவீதமாகவும் சனிக்கிழமை சதவீதம் 13 சதவீதமாகவும் இருந்த நிலையில் திங்கள்கிழமை 6 சதவீதமாக காணப்பட்டது என சபா் தெரிவித்தது.

திங்கள்கிழமை தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது. காற்றில் ஈரப்பதம் 59 மற்றும் 90 சதவீதத்திற்கும் இடைப்பட்டதாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com