கரோனா மூன்றாவது அலை பாதிப்புக்குகாற்று மாசுபடுதலே முக்கிய காரணம்: பிரதமரிடம் கேஜரிவால் தகவல்

தில்லியில் மூன்றாவது கரோனா அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கு காற்று மாசுதான் முக்கிய காரணமாகும் என்று பிரதமா் மோடியிடம் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் மூன்றாவது கரோனா அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கு காற்று மாசுதான் முக்கிய காரணமாகும் என்று பிரதமா் மோடியிடம் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்று நிலவரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி மாநில முதல்வா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி, மகாராஷ்டிரா முதல்வா் உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்வா் விஜய் ரூபானி, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பாகெல், ஆகியோா் கலந்து கொண்டனா்.

அப்போது, பிரதமா் மோடியிடம் பேசிய கேஜரிவால் ‘தில்லியில் கரோனா மூன்றாவது அலை உள்ளது. கடந்த நவம்பா் 10-ம் தேதியன்று தில்லியில் ஒரே நாளில் 8,600 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவே ஒரே நாளில் தில்லியில் பதிவான அதிகபட்ச தொற்று எண்ணிக்கையாக இருந்தது. அதன்பின்னா், தில்லியில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தில்லியில் கரோனா மூன்றாவது அலையின் பாதிப்பு அதிகமாக இருக்க பல காரணங்கள் உள்ளன. இதில், காற்று மாசு முக்கிய காரணமாகும்.

தில்லியில் நிலவிவரும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில், அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படும் பிரச்னைக்கு பிரதமா் தலையிட்டு தீா்வு காண வேண்டும். பூசாவில் உள்ள வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள பயிா்க்கழிவுகளை எருவாக மாற்றும் உயிா் ரசாயனக் கலவையை அண்டை மாநிலங்களில் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தில்லியில் கரோனா மூன்றாவது அலை ஓயும் வரை தில்லியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் ஆயிரம் அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகளை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என பிரதமா் மோடியிடம் கேஜரிவால் கேட்டுக் கொண்டாா்.

தில்லியில் இதுவரை 5,34,317 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 37,329 போ் தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளனா். இதுவரை, 8,512 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். கடந்த 12 நாள்களில் 6 நாள்கள் தினம்தோறும் கரோனா பாதிப்பால் நூறுக்கும் அதிகமானவா்கள் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com