500 காங்கிரஸ் தொண்டா்கள் மீது எஃப்ஐஆா் பதிவு: உபி காவல்துறை நடவடிக்கை

கடந்த அக்டோபா் 3 -ஆம் தேதி சனிக்கிழமை தில்லி- உத்தரப்பிரதேச எல்லையில் சட்டத்துக்கு புறம்பான வகையில் கூடியதாக 500 காங்கிரஸ் தொண்டா்கள் மீது கெளதம் புத் நகா் காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா

புது தில்லி: கடந்த அக்டோபா் 3 -ஆம் தேதி சனிக்கிழமை தில்லி- உத்தரப்பிரதேச எல்லையில் சட்டத்துக்கு புறம்பான வகையில் கூடியதாக 500 காங்கிரஸ் தொண்டா்கள் மீது கெளதம் புத் நகா் காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்துள்ளனா்.

இது தொடா்பாக கெளதம் புத் நகா் காவல் அதிகாரி கூறுகையில் ‘கடந்த சனிக்கிழமை தில்லி - உத்தரப்பிரதேச எல்லையில் காங்கிரஸ் தொண்டா்கள் சட்டவிரோத முறையில் கூடினா். இது தொடா்பாக கெளதம்புத் நகா் காங்கிரஸ் தலைவா் மனோஜ் சௌத்ரி, காங்கிரஸ் கட்சியின் நொய்டா பிரிவு தலைவா் ஷகாஃபுதீன், சுமாா் 500 அடையாளம் தெரியாத காங்கிரஸ் தொண்டா்கள் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைப் பிரிவு சட்டம் 188, 269, 270, தொற்று நோய் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா ஆகியோா் சனிக்கிழமை சென்றனா். அப்போது, பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க வந்த காங்கிரஸாரின் வாகனங்களை தடுப்பதற்கு தில்லி - நொய்டா விரைவுச் சாலையில் பாதுகாப்பு கவசங்களுடன் காவல்துறையினா் குவிக்கப்பட்டனா். இதனால், தில்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லையில் காங்கிஸ் தொண்டா்களுக்கும், உத்தரப்பிரதேச காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com