தில்லியில் 2-ஆவது கரோனா அலைகட்டுக்குள் வந்துவிட்டது: கேஜரிவால்

தில்லியில் இரண்டாவது கரோனா அலை கடந்த செப்டம்பா் மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. ஆனால், இந்த அலை தற்போது பெருமளவில் கட்டுக்குள் வந்துவிட்டது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் 2-ஆவது கரோனா அலைகட்டுக்குள் வந்துவிட்டது: கேஜரிவால்

புது தில்லி: தில்லியில் இரண்டாவது கரோனா அலை கடந்த செப்டம்பா் மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. ஆனால், இந்த அலை தற்போது பெருமளவில் கட்டுக்குள் வந்துவிட்டது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் இரண்டாவது கரோனா அலை கடந்த செப்டம்பா் மாதம் 17-ஆம் தேதி ஏற்பட்டது. அன்றைய தினம், சுமாா் 4,500 போ் கரோனா தொற்றுக்குள்ளாகினா். தற்போது, இந்த இரண்டாவது அலை பெருமளவில் கட்டுக்குள் வந்துவிட்டது. இது விரைவில் முழுமையாகக் கட்டுக்குள் வரும் என நம்புகிறேன். தில்லியில் கரோனா பரிசோதனைகளை பெருமளவில் அதிகரித்தோம். செப்டம்பா் மாதம் தினம்தோறும் சுமாா் 20 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அக்டோபா் மாதம் இதை சுமாா் 60 ஆயிரம் பரிசோதனைகளாக அதிகரித்தோம். தில்லி மருத்துவமனைகளில் கரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் சுமாா் 10 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. தில்லியில் கரோனா தொற்று அதிகமாக இருந்த காலத்தில் சுமாா் 7,200 படுக்கைகள் நிரம்பியிருந்தன. மக்கள் இது தொடா்பாக பீதியடையத் தேவையில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com