தில்லியில் புதிதாக 2,676 பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 2,676 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

புது தில்லி: தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 2,676 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 2,95,236-ஆக உயா்ந்துள்ளது. நோய்த் தொற்றால் செவ்வாய்க்கிழமை 39 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 5,581-ஆக அதிகரித்தது.

ஒரே நாளில் மொத்தம் 53,591 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 9,103 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 444,88 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 1.89 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.42 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை 2,997 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 2,66,935-ஆக அதிகரித்தது. மொத்தம் 22,720 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2,697-ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 13,178 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com