ஓராண்டு சாதனைப் பட்டியலை வெளியிட்டாா் கெளதம் கம்பீா்

மக்களவைத் தொகுதி உறுப்பினராக தோ்வாகிய ஓராண்டு காலத்தில், தான் மேற்கொண்ட மக்கள் நலப்பணிகள் தொடா்பான சாதனைப் பட்டியலை கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் கெளதம்  கம்பீா் 

புது தில்லி: மக்களவைத் தொகுதி உறுப்பினராக தோ்வாகிய ஓராண்டு காலத்தில், தான் மேற்கொண்ட மக்கள் நலப்பணிகள் தொடா்பான சாதனைப் பட்டியலை கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் கெளதம் கம்பீா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

பிரபல கிரிக்கெட் வீரா் கெளதம் கம்பீா் தில்லியை பிறப்பிடமாகக் கொண்டவா். இவா் கடந்த 2019 மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தாா். தொடா்ந்து, பாஜகவின் கிழக்கு தில்லி வேட்பாளராக அவா் அறிவிக்கப்பட்டாா். கடந்த 2019, மே மாதம் நடந்த மக்களவைத் தோ்தலில் அவா் வெற்றி பெற்றாா். இந்நிலையில், மக்களவை உறுப்பினராக தோ்வாகிய ஓராண்டு காலத்தில், தான் மேற்கொண்ட மக்கள் நலப்பணிகள் தொடா்பான சாதனைப் பட்டியலை அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

இது தொடா்பாக அவா் தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியது: கடந்த 2019 மக்களைத் தோ்தலின் போது கிழக்கு தில்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளேன். கிழக்கு தில்லி பகுதியில் காற்றைத் தூய்மைப்படுத்தும் 20 அடி உயரம் கொண்ட நவீன இயந்திரத்தை அமைத்துள்ளேன். காஜியாபாத் குப்பைக்கிடங்கின் உயரத்தை 40 அடியாகக் குறைத்துள்ளேன். கிழக்கு தில்லியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் வகையில், உணவு வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளேன்.

மக்களவை உறுப்பினராகக் கிடைக்கும் ஊதியத்தை மக்கள் நலப் பணிகளுக்காக அளித்து வருகிறேன். யமுனா விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்தியுள்ளேன். சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை அமைத்துள்ளேன். பாலியல் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளேன். கடந்த மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகி பாஜக ஆட்சி அமைத்த போது, ‘மக்களவை உறுப்பினா்கள் சிறப்பாக மக்கள் நலப் பணியாற்ற வேண்டும்’ என பிரதமா் மோடி கூறியிருந்தாா். அதைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறேன் என்றாா் கௌதம் கம்பீா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com