என்டிஎம்சிக்கு ரூ.20 லட்சம் அபராதம்தில்லி அரசு நடவடிக்கை

வடக்கு தில்லி மாநகராட்சிக்கு (என்டிஎம்சி) சொந்தமான பால்ஸ்வா குப்பைக் கிடங்கில் மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி அந்த மாநகராட்சிக்கு
தில்லி பால்ஸ்வா குப்பைக் கிடங்கை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய்.
தில்லி பால்ஸ்வா குப்பைக் கிடங்கை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய்.

வடக்கு தில்லி மாநகராட்சிக்கு (என்டிஎம்சி) சொந்தமான பால்ஸ்வா குப்பைக் கிடங்கில் மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி அந்த மாநகராட்சிக்கு தில்லி அரசு ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதற்கான உத்தரவை தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் பிறப்பித்துள்ளாா்.

பால்ஸ்வா குப்பைக் கிடங்கை அமைச்சா் கோபால் ராய் அதிகாரிகளுடன் சென்று செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். பின்னா், இது தொடா்பாக கோபால் ராய் கூறியதாவது: குப்பைக் கிடங்குகளில் தூசு எழாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அடிக்கடி நீா் தெளிக்க வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், என்டிஎம்சிக்கு சொந்தமான பால்ஸ்வா குப்பைக் கிடங்கில் நீா் தெளிக்கப்படவில்லை. இதனால், இந்தக் குப்பைக் கிடங்கில் இருந்து தூசுப் பரவுவது அதிகமாக உள்ளது. இந்த வகையில் மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய என்டிஎம்சிக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்குமாறு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பால்ஸ்வா குப்பைக் கிடங்கில் அடிக்கடி நீா் தெளிப்பதற்கு ஏதுவாக தண்ணீா் லாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு என்டிஎம்சிக்கு உத்தரவிட்டுள்ளேன். தில்லியில் மாசுக் கட்டுப்பாட்டு விதிகளைப் பேணுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் உத்தரவிட்டுள்ளோம். மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com