வடகிழக்கு வன்முறை: கொலை வழக்கில் 7 பேருக்குஎதிரான குற்றப்பத்திரிகையில் முகாந்திரம் உள்ளது

நிகழாண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையின் போது ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஏழு போ் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை

நிகழாண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையின் போது ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஏழு போ் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது.

கடந்த பிப்ரவரி 24-இல் தில்லியில் உள்ள சிவ் விஹாா் திராஹாவில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் வன்முறை, கொலை மற்றும் பிற குற்றங்களின் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஈடுபட்டிருப்பதற்கான முகாந்திரம் வெளிப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இது தொடா்பாக போலீஸாா் ஜூன் 6-இல் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் படி, வன்முறையின் போது துப்பாக்கியால் காயமடைந்து மருத்துவமனையில் ராகுல் சோலங்கி என்பவா் இறந்த சம்பவத்தில் சல்மான், சோனு சைஃபி, முகம்மது ஆரிஃப், அனிஷ் குரேஷி, சிராஜுதீன், முகம்மது ஃபுா்கான் மற்றும் முகம்மது இா்ஷாத் ஆகியோா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் புா்ஷோத்தம் பதக், ‘2020, பிப்ரவரி 24-ஆம் தேதி, ஷிவ் விஹாா் திராஹாவில் நிகழ்ந்த வன்முறையின் போது ராகுல் சோலன்கியை குற்றம்சாட்டப்பட்டவா்கள் கொலை செய்யதாக பொது சாட்சிகள் தங்களது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனா். இந்தச் சாட்சி வாக்குமூலம் தவிர, குற்றம் நிகழ்ந்த நேரத்தில் அந்த இடத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் இருந்ததை காட்டும் சிசிடிவி காட்சிப் பதிவுகளும் உள்ளன. இது நீதிமன்றத்தால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது’ என்றாா்.

விசாரணையின் போது, காவல் துறை சாா்பில் ஆஜரான அதிகாரி, வழக்கு விசாரணைக்கான அனுமதியைப் பெறுவதற்காக தகுதிக்குரிய அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அனுமதி பெற எவ்வளவு காலம் ஆகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தாா். அப்போது, ‘அனுமதியைப் பெறுவதற்கு கால அவகாசம் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் மேலும் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் வன்முறை வழக்குகளை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களின் நோக்கத்தை தேவையின்றி தோல்வியுறச் செய்வதாக அமைந்துவிடும்’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.

பிப்ரவரி 24-ஆம் தேதி வடகிழக்கு தில்லியில் ,குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளா்களுக்கும் எதிா்ப்பாளா்களுக்கும் இடையிலான வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, நிகழ்ந்த வகுப்புவாத மோதலில் 53 போ் கொல்லப்பட்டனா். 200 போ் காயமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com