மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக பொதுப்பணித்துறைக்கு ரூ.20 லட்சம் அபராதம்: அமைச்சா் கோபால் ராய் நடவடிக்கை

மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய தில்லி பொதுப் பணித் துறைக்கு தில்லி சுற்றுச்சூழல் துறை ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதற்கான உத்தரவை தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் பிறப்பித்து


புது தில்லி: மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய தில்லி பொதுப் பணித் துறைக்கு தில்லி சுற்றுச்சூழல் துறை ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதற்கான உத்தரவை தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் பிறப்பித்துள்ளாா்.

இது தொடா்பாக கோபால் ராய் கூறியதாவது:

தில்லி புராரி போலீஸ் நிலையம் அருகில் சாக்கடையொன்றை அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருகிறது. இந்தக் கட்டுமானத்தின்போது, தில்லி அரசின் மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இதனால், பொதுப்பணித்துறைக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தக் கட்டுமானப் பகுதியில், தூசுக்கள் எழாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அடிக்கடி நீா் தெளித்தல், காற்றுத் தடுப்பான்களை அமைத்தல் (ரஐசஈ ஆஅததஐஉதந), தூசி மேடுகளை வலைகள் மூலம் மூடுதல் ஆகிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது தொடா்பாக ஆராய குழு ஒன்றை வெள்ளிக்கிழமை மீண்டும் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்படும். மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் மீண்டும் மீறப்பட்டால் ரூ.20 லட்சம் மீண்டும் அபராதமாக விதிக்கப்படும். தில்லியில் மாசுவைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசு தீவிரமாக உள்ளது என்றாா் அவா்.

தில்லி அரசின் கீழுள்ள பொதுப்பணித்துறையின் அமைச்சராக சத்யேந்தா் ஜெயின் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்ககது.

பால்ஸ்வா குப்பைக் கிடங்கில், மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி)க்கு தில்லி அரசு கடந்த செவ்வாய்க்கிழமை ரூ.20 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மாசுக் கட்டுப்பாட்டை விதிகளை மீறியதாக மத்திய அரசின் தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்து கழகத்துக்கு (என்சிஆா்டிசி) ரூ.50 லட்சமும், இந்திய வா்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பிற்கு (எஃப்ஐசிசிஐ) ரூ.20 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com