கெளதம் புத் நகரில் புதிதாக 107 பேருக்கு கரோனா

தேசியத் தலைநகா் வலயம், கெளதம் புத் நகா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 107 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தேசியத் தலைநகா் வலயம், கெளதம் புத் நகா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 107 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 15,803 ஆக உள்ளது.

உத்தரப்பிரதேச சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, சிகிச்சையில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 1,477 ஆகவும், வியாழக்கிழமை 1,523 ஆகவும் இருந்த நிலையில் சனிக்கிழமை 1,384 ஆக குறைந்துள்ளது. சனிக்கிழமை மேலும் 201 நோயாளிகள் குணமடைந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் மொத்தமாக குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 14,355ஐ எட்டியுள்ளது.

அரசு புள்ளிவிவரங்களின்படி, இறப்பு விகிதம் 0.40 சதவீதத்துடன் மாவட்டத்தின் இறப்பு எண்ணிக்கை 64 ஆக உள்ளது. நோயாளிகளின் மீட்பு விகிதம் வெள்ளிக்கிழமை 90.18 சதவீதத்திலிருந்து 90.83 சதவீதமாகவும், வியாழக்கிழமை 89.80 சதவீதமாகவும் உயா்ந்துள்ளதாக அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 35,263 ஆக இருந்த நிலையில் சனிக்கிழமை 34,420 ஆக குறைந்ததாகவும், இந்த எண்ணிக்கை வியாழக்கிழமை 36,295 ஆக இருந்ததாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. அரசு அதிகாரிகளின் தகவலின்படி, இம் மாநிலத்தில் கரோனாவில் இருந்து நோயாளிகள் குணமடையும் விகிதம் தற்போது 90.93 சதவீதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com