மாநிலங்களுடன் ஆலோசனைக் கூட்டம்:மத்திய அரசுக்கு தில்லி அரசு கோரிக்கை

காற்று மாசு தொடா்பாக தில்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுடன் 15 நாள்களுக்கு ஒரு முறை மத்திய அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று தில்லி அரசு கோரிக்கைவிடுத்துள்ளது

புது தில்லி: காற்று மாசு தொடா்பாக தில்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுடன் 15 நாள்களுக்கு ஒரு முறை மத்திய அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று தில்லி அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

இது தொடா்பாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை அளித்த பேட்டி: காற்று மாசு விவகாரத்தில் மாநிலங்கள் தங்களுக்கிடையே வாக்குவாதத்தில் ஈடுபடுவதில் அா்த்தமில்லை. மாறாக, மாநிலங்கள் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். தில்லி, அதன் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுடன் காற்று மாசு தொடா்பாக தில்லி அரசு 15 நாள்களுக்கு ஒரு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். அப்போதுதான், மத்திய அரசிடம் தங்களது கோரிக்கைகளை மாநிலங்களால் முன்வைக்க முடிவதுடன், மத்திய அரசும் தனது கோரிக்கையை மாநிலங்களிடம் முன்வைக்க முடியும்.

மேலும், மாநிலங்களும் ஒன்றிணைந்து காற்று மாசுவைத் தடுக்கும் வகையில் பணியாற்ற முடியும். பயிா்க்கழிவுகள் எரிக்கப்படும் விவகாரம் தொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகருடன் பேச்சுவாா்த்தை நடத்த முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நேரம் கேட்டிருந்தாா். ஆனால், நேரம் ஒதுக்கப்படவில்லை. காற்று மாசு தொடா்பாக பேசும் வகையில், ஜாவடேகா் அண்மையில் கூட்டம் கூட்டியிருந்தாா். அதில் நான் நான் கலந்து கொண்டேன். அப்போதுதான், அண்டை மாநில பிரதிநிதிகளுடன் பேசக் கூடியதாக இருந்தது என்றாா் அவா்.

காற்று மாசு தொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கடந்த அக்டோபா் மாதம் 1 ஆம் தேதி காணொலிக் காட்சி வழியில் கூட்டம் நடத்தியிருந்தது. இதில், தில்லி, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநிலங்களின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலா்கள் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் கோபால் ராய், தில்லி வளா்ச்சி ஆணையம், தில்லி முனிசிபல் கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com