தில்லியில் பசுமை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி, விற்பனை செய்யப்பட வேண்டும்: தில்லி அரசு உத்தரவு

தில்லியில் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி, விற்பனை செய்யப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தில்லி அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி, விற்பனை செய்யப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தில்லி அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், தில்லியில் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி, விற்பனை செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியா்கள், தில்லி காவல் துறையினா் உறுதி செய்ய வேண்டும் என தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக நாளாந்த அறிக்கை சமா்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா்கள், மாவட்டக் காவல் துறை துணை ஆணையா்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

தீபாவளி, குா்பூரப் பண்டிகை நாள்களில் இரவு 8-10 மணிக்கிடைப்பட்ட நேரத்தில் மக்கள் பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ், புது வருட தினங்களில் இரவு 11.55-12.30 இடையான நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. முறையாக உரிமம் பெற்ற வணிகா்கள் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்யலாம். பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் (பிஇஎஸ்ஓ) தரச்சான்றிதழ் அவசியமாகும். எந்தெவாரு இணைய வா்த்தக நிறுவனங்களுக்கும் பட்டாசுகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. வரும் நவம்பா் 3-ஆம் தேதி முதல் காற்று மாசுவை ஏற்படுத்தும் பட்டாசுகளைக் கண்டறியும் வகையில், அதிரடி சோதனை நடத்த தில்லி அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, தில்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தில்லி காவல் துறை அதிகாரிகள் கொண்ட 11 குழுக்கள் தில்லியில் பட்டாசுகள் தயாரிக்கப்படும் இடங்களில் அதிரடி சோதனை நடத்தவுள்ளது என்றாா் அவா்.

காற்று மாசுவைக் குறைக்கும் வகையில், பசுமைப் பட்டாசுகளை வெடிக்க மட்டுமே உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மற்றைய பட்டாசுகளுடன் ஒப்பிடும் போது, பசுமைப் பட்டாசுகளில் காற்று மாசுவை ஏற்படுத்தும் சல்பா் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய ரசாயனங்கள் 30 சதவீதம் குறைவாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com