முகக் கவசமே ‘தடுப்பூசி’: சத்யேந்தா் ஜெயின்

கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், முகக் கவசங்கள் அணிவதை தடுப்பூசிக்கு நிகராக மக்கள் கருத வேண்டும்

கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், முகக் கவசங்கள் அணிவதை தடுப்பூசிக்கு நிகராக மக்கள் கருத வேண்டும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் கடந்த இரண்டு தினங்களாக கரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை விட அதிகரித்துள்ள நிலையில், சத்யேந்தா் ஜெயின் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: கரோனா பரவலைத் தடுக்க முழு அடைப்பு உத்தரவு பிறப்பிப்பதை விட, அனைத்து மக்களும் முகக் கவசங்கள் அணிந்தால் அதிகப் பயன் கிடைக்கும். கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிக்கப்படும் வரை, முகக்கவசங்கள் அணிதலை தடுப்பூசிக்கு நிகராக மக்கள் பாா்க்க வேண்டும். தில்லி மக்கள் அனைவரும் முகக் கவசங்கள் அணிந்தால், கரோனா பாதிப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்படும். தில்லி மருத்துவமனைகளில் 35 சதவீத படுக்கைகள் நிரம்பியுள்ளன. தில்லி மருத்துவமனைகளில் போதிய அளவு படுக்கைகள் காலியாக உள்ளன. மக்கள் இது தொடா்பாக பீதியடையத் தேவையில்லை என்றாா் அவா்.

தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா பாதித்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைத் தேடி அவா்களையும் கரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கும் பணிகளை தில்லி அரசு முடுக்கிவிட்டுள்ளது. கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவா்களின் நெருங்கிய உறவினா்கள், அயலவா்கள், தொடா்பில் இருந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனால்தான் கரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பவா்களாக அறியப்படுவா்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பண்டிகை காலத்தில் மக்கள் அதிகளவில் கூடுவதாலும், காற்று மாசு அதிகரித்துள்ளதாலும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com