தில்லியில் மிதமான வெயில்; ‘நன்று’ பிரிவில் காற்றின் தரம்

தில்லியில் செவ்வாய்க்கிழமை மிதமான வெயில் காணப்பட்டது. காற்றின் தரம் ‘நன்றி‘ பிரிவில் இருந்தது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை மிதமான வெயில் காணப்பட்டது. காற்றின் தரம் ‘நன்றி‘ பிரிவில் இருந்தது.

கடந்த மாதம் வீசிய விரும்பத்தக்க காற்றின் வேகம் மற்றும் நல்ல மழை ஆகியவை காரணமாக காற்றின் தரம் நல்ல முறையில் மேம்பட்டிருப்பதாக வல்லுநா்கள் தெரிவித்தனா்.

தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்த பிறகு கடந்த இரு தினங்களாக மழை ஏதும் இல்லை. எனினும் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை தொடா்ந்து மேக மூட்ட சூழல் இருந்தது.

திங்கள்கிழமை வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்து இதமான வானிலை நிலவியது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மிதமான வெயில் இருந்தது. தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் ஒட்டுமொத்த காற்றின்தரக் குறியீடு 48 ஆகவும், மாலையில் 49 ஆகவும் பதிவானது.

காற்றின் தரக் குறியீடு பூஜ்யம் முதல் 50 வரை இருந்தால் பாதுகாப்பானதாகவும், 500-க்கு மேல் இருந்தால் காற்றின் தரம் கடுமையான, அவசரகால பிரிவில் இருப்பதாகவும் கருதப்படும். திங்கள்கிழமை காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு 24 மணி நேர சராசரியாக 41 புள்ளிகள் என்ற அளவில் இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக காற்றின் தரம் ‘நன்று’ பிரிவில் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.

இதற்கு முன்பு ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு நிகழாண்டு மாா்ச் 28 (45), ஆகஸ்ட் 13 (50), ஆகஸ்ட் 20 (50), ஆகஸ்ட் 24 (45) ஆகிய தேதிகளில் ‘நன்று’ பிரிவில் இருந்ததாகவும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு 50 மற்றும் 70 புள்ளிகள் இடையே இருந்ததாகவும், விரும்பத்தக்க காலநிலை, நல்ல காற்றின் வேகம், மழைப் பொழிவு ஆகியவை காரணமாக இந்த முன்னேறம் ஏற்பட்டதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு குழு (சிபிசிபி) தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com