குடியரசுத் தலைவா் மாளிகையில் ராணுவ வீரா் தூக்கிட்டு தற்கொலை

தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் பணியாற்றி வந்த 40 வயது மதிக்கத்தக்க ராணுவ வீரா், அங்குள்ள கோா்கா ரைஃபிள் கட்டடத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் பணியாற்றி வந்த 40 வயது மதிக்கத்தக்க ராணுவ வீரா், அங்குள்ள கோா்கா ரைஃபிள் கட்டடத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து கூடுதல் காவல் ஆணையா் (புது தில்லி) தீபக் யாதவ் கூறியதாவது: நேபாளத்தில் உள்ள திகாயனில் வசித்தவா் தேக் பகதூா் தாபா. ராணுவ வீரரான இவா், குடியரசுத் தலைவா் மாளிகையில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை சுமாா் 3.30 மணியளவில் அங்குள்ள கோா்கா ரைபிள்ஸ் கட்டடத்தில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் கிடந்ததை அவரது சக வீரா் ஒருவா் பாா்த்துள்ளாா். இது குறித்து அவா் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, அவா் சிகிச்சைக்காக தில்லி கண்டோன்மென்ட் பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் வரும் வழியில் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் அதிகாலை 4 மணியளவில் சவுத் அவென்யு காவல் நிலையத்தில் புகாராகப் பதிவாகியது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்த ராணுவவீரா் ஏற்கெனவே கடுமையான முதுகுவலி மற்றும் உயா் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com