காங்கிரஸ் கவுன்சிலா் ஆம் ஆத்மி தலைவரால் தாக்கப்பட்டதாக அனில் குமாா் குற்றச்சாட்டு

பட்டியலின குடும்பத்தைச் சோ்ந்தவா்களின் குடிசையை இடிப்பது தொடா்பாக கேள்வி எழுப்பியதற்காக தில்லி கண்டோன்மென்ட் வாரிய

பட்டியலின குடும்பத்தைச் சோ்ந்தவா்களின் குடிசையை இடிப்பது தொடா்பாக கேள்வி எழுப்பியதற்காக தில்லி கண்டோன்மென்ட் வாரிய காங்கிரஸ் கவுன்சிலா் ஆம் ஆத்மி தலைவரால் தாக்கப்பட்டதாக தில்லி காங்கிரஸ் தலைவா் சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து அனில் குமாா் சனிக்கிழமை கூறுகையில், தில்லி கன்டோன்மென்ட் வாரியத்தின் காங்கிரஸ் கவுன்சிலா் சந்தீப் தன்வா், பட்டியலின குடும்பத்தினருக்குச் சொந்தமான குடிசையை இடிப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளாா். இதற்காக அவரை ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த தலைவா் தாக்கியுள்ளாா். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு எட்டு தையல்கள் போடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக தில்லி துணைநிலை ஆளுநரும், நகர காவல் ஆணையரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இது குறித்து சந்தீப் தன்வா் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக நரைனா காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளேன். இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தக் கோரி தேசிய பட்டியலின ஆணையத்தின் செயலாளா் சுஷில் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றாா்.

இதுகுறித்து தில்லி காவல்துறை அதிகாரி கூறுகையில், இந்த விவகாரம் தொடா்பாக புகாா் வந்துள்ளது. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், எங்களுக்கு வந்த புகாரில், அண்டைத் தகராறில் தன்வா் காயமடைந்தாக தெரியவந்துள்ளது. தற்போது வரை குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் குறித்து அடையாளத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. இதனால் இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தரப்பில் உடனடியாக பதில் பெற முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com